மெல்லியது ஓராது அறிவு - கலித்தொகை 117

My soul is naive and fragile - Kaliththogai 117

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணித் துடைத்தன்ன மேனியாய் கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின்
கையது எவன் மற்று உரை

கையதை சேரிக் கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர்  
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில் புட்டிலுள் என் உள
காண் தக்காய் எற் காட்டிக் காண்

காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை மற்று இவை

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு
The one who has a body like
A well-polished well-molten gold adorned with gems,
The one who has lovely breasts
Like young buds of kongu flower and
Painted with sandal paste drawings,
Tell me, what is in your hand?

I am the daughter of the headman of this town. Also,
This is a basket made of palmyra leaf strips
Woven by a beautiful weavesmaid.
What is in the basket, o girl who is fit-to-look-at? Show it to me.

Here, look. These mullai buds were plucked in the forest
By my friend who wears flowers on her hairlock, and her lover.

Yes, there are mullai buds, o girl with mellow hair!
It is dark. The day has passed. But I just saw you here.
How can I ask you to leave? Also,
My soul is naive and fragile.