நாண்இலி நீ - கலித்தொகை 116

O you shameless! - Kaliththogai 116

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு

விடேஎன் தொடீஇய செல்வார்த் துமித்து எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி தொழுவாயில்
நீங்கி சினவுவாய் மற்று

நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு  
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு

யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின்
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்கப் பெறின்

நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய்
கலத்தொடு யாம் செல்வுழி நாடி புலத்தும்
வருவையால் நாண்இலி நீ
Here I am, going with my calf
To a neighborhood field where people are hard to come by.
You stand in front of me holding one end of my rope and
Blocking me, hey you!
Are you mad? Leave me.

No! Like a calf that proceeds forward strongly
When someone tries to touch it,
You look angry and are trying to
Leave this shed.

You leave. Like a cow that comes to protect its calf
From those who try to hold it,
My heartless mother will come. Save yourself.

Let your mother come.
Let others come.
Let even your father come.
I will not get disheartened
If you bestow your blessing.

You do not listen to any of my words.
You think about me always like
A motionless bull standing in the rain.
You allure me by your incessant replies.
Are you coming to the grazing field too,
where I go with milk vessel?
O you shameless!