குறும்பா 10 (குறுந்தொகை 384)

விஜய் மே 19, 2012 #குறும்பா #குறுந்தொகை

தோழி: நீ செஞ்சச் சத்தியமும் நன்று. நீ பரத்தையரிடம் போய் மகிழ்ந்ததும் நன்று. உன்ன உள்ளே விடமுடியாது.

உழுந்தங்காயை அடிக்கிற தடியைப் போல தேஞ்சும், பருத்தும் உள்ள கழுத்துடைய, கரும்பை வண்ணமாக தீட்டின தோளுடைய, நீண்ட கூந்தல்கொண்ட சிறிய கையில சிறிய வளையல் போட்டிருக்கிற மகளிர்களின் பெண்மையை நுகர்ந்துவிட்டு வந்திருக்க. ஆஹா, நீ செஞ்சச் சத்தியமும் ரொம்ப அருமை; நீ பரத்தையரிடம் போய் மகிழ்ந்ததும் ரொம்ப அருமை. சபாஷ். உன்னைத் தலைவியப் பாக்க அனுமதிக்கமுடியாது.

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே

(ஓரம்போகியார்)


< பின்
⌂ முகப்பு