குறும்பா 20 (குறுந்தொகை 280)

மே 29, 2012 குறும்பா குறுந்தொகை

அவக்கூட ஒரு நாள் வாழ்ந்து, பேரின்பம் அனுபவிச்சா போதும்யா. அதுக்கப்பறம் அரைநாள்கூட வாழவேண்டா.

எல்லா நாளும் என் நெஞ்சுல பிணைஞ்சு இருக்கா. அழகிய கூந்தல் அவளுக்கு. பெரிய தோள். இளைய வயசு. மெலிதான உடம்பு. அவக்கூட ஒரு நாள் வாழ்ந்து, பேரின்பம் அனுபவிச்சா போதும்யா. அதுக்கப்பறம் அரைநாள்கூட வாழவேண்டா.

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே

(நக்கீரர்)

< பின் ⌂ முகப்பு