குறும்பா 21 (குறுந்தொகை 20)

விஜய் மே 30, 2012 #குறும்பா #குறுந்தொகை

பொருள் தேடற ஆற்றல்தான் அறிவுனா அவரு புத்திசாலியாகவே இருக்கட்டும். நான் மடச்சியாகவே இருந்துட்டுப் போறேன்.

ஒரு பெண்ணுங்கறதுனால அருளும் இல்லாம, மனைவிங்கறதுனால என் மேல அன்பும் இல்லாம, இப்படி என்னவிட்டுப் பிரிஞ்சுட்டார். பொருள் தேடறத்துக்காக என்னப் பிரிஞ்சுப் போய்ட்டார். பொருள் தேடற ஆற்றல்தான் அறிவுனா அவரு புத்திசாலியாகவே இருக்கட்டும். நான் மடச்சியாகவே இருந்துட்டுப் போறேன்.

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே

(கோப்பெருஞ் சோழன்)


< பின்
⌂ முகப்பு