விருப்பம்

விஜய் டிசம்பர் 14, 2013 #குறிப்பு

ஒரு ஆணோ பெண்ணோ பருவ வயதை எட்டும்பொழுது, எதிர்பாலினத்தினரின் மீது காம இச்சையோ ஈர்ப்போ கொள்வது என்பது இயற்கையாக வருவது. அவர்களின் பெற்றோரோ சமூகமோ சொல்லித்தந்து வருவதில்லை. காதல் பற்றியோ ஈர்ப்பு பற்றியோ புத்தகமோ, தொலைக்காட்சியோ, நண்பர்களோ, பெற்றோர்களோ அவர்களிடம் பாடம் நடத்தவேண்டியதில்லை. உடலில், மூளையில் இயற்கையாக வரும் மாறுதலில் காதலும் காமமும் ஏற்படுவது.

இதேபோல்தான் ஆண் ஆணிடமும் பெண் பெண்ணிடமும் கொள்ளும் ஈர்ப்பு என்பது. யாரும் இதை தேர்வு செய்வதில்லை; இயற்கையாக நடப்பது. எந்த மனிதனும் அவன் பதின்ம வயதில் ஒரு முழுநாள் ஒதுக்கிவிட்டு பலமணிநேரம் யோசித்து, “இதோ இன்றைக்கு முடிவு எடுக்கப் போகிறேன். நான் ஆணைக் காதலிக்கலாமா அல்லது பெண்ணைக் காதலிக்கலாமா?” என்று கேட்பதில்லை. ஒருபால் ஈர்ப்பை ‘விருப்பத்தேர்வு’ என்று சொல்வது தவறு. எப்படி எதிர்பால் ஈர்ப்பினர் அவர் இச்சையை அவர் முடிவு செய்வதில்லையோ, ஒருபால் ஈர்ப்பினரும் முடிவு செய்வதில்லை. மருத்துவ ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன.

சிறிதுநேரம் ஒதுக்கி இந்த விக்கியைப் படித்தாலே பல சந்தேகங்கள் தீரும். http://en.wikipedia.org/wiki/Homosexuality


< பின்
⌂ முகப்பு