எல்டொராடோ (சுஜாதா)

விஜய் மே 18, 2014 #வாசிப்பு #சிறுகதை

வீட்டைவிட்டு ஓடிப்போன கடைசி மகன் பரத், மரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். குடும்ப உறுப்பினர்களால் மனதளவில் கைவிடப்பட்டு, ஓர் அறையில் தனியாகக் கிடத்தப்பட்டிருக்கும் அப்பாவைப்பார்த்து “இது என் அப்பா அல்ல. அவரின்பாதி!” என்கிறான். அப்பா கண்விழிக்கிறார். அப்பா-மகன் உறவு ஓர் அழகான உரையாடல் மூலம் வெளிப்படுகிறது. அதன்வழி அவர்களின் நட்பு,ஆசைகள், விருப்பங்கள்ஆகியவை வெளிப்படுகின்றன. இருவரும் ஒரு தங்கப்புதையலைத் தேடி அலைந்து தோல்வியடைந்தவர்கள். அது உண்மையிலேயே புதையல்தானா அல்லது வெறும்கானலா? அப்பா கடைசி மகனுக்கே அனைத்துச் சொத்துகளையும் எழுதி வைத்திருக்கிறார். அதே இரவில் பரத்தின் அருகிலேயே உயிர்பிரிகிறார். குடும்பத்தினர், “இதோ, வந்தான், முடிச்சுட்டான்” என்கின்றனர். பரத் அவர்களிடம் சடங்குகளை முடித்தப்பின்பு அவர்களுக்கே எல்லா சொத்துகளையும் கொடுத்துவிடுவதாக கூறி வெளியேறுகிறான்.



< பின்
⌂ முகப்பு