டாக்டர் ராகவேனியம் ஒரு தனதாக இயங்கும் புத்தக மிஷினைத் (தம்பு) தயாரிக்கிறார். அது ஒரு மின்னியல் மற்றும் மின்னணுவியலின் ஜாலம். ஓர் அற்புதம் என்று வியக்கிறார். அது சிறுகதையோ,தொடர்கதையோ, கவிதையோ, துணுக்கோ, விஞ்ஞானமோ, நமக்கு எது விருப்பமோ அதை அச்சடித்துக் கொடுக்கும். அதற்காக அவர் இயந்திர தற்கற்றல் (machine learning) முறையை உபயோகிக்கிறார். ஏராளமான பழைய பத்திரிக்கை மற்றும் புத்தகங்களைத் தம்பு படித்துக்கொண்டு அதன்படி ஒவ்வொரு கதைவகைக்கும் ஒரு ஒப்புருவை (model) உருவாக்கிகொண்டு, அதற்கேற்றப்படி புதுகதையைத் தயாரிக்கும்.
நமக்குத் தேவையான நடையைக்கூடதேர்வுசெய்துகொள்ளலாம். உதாரணம்: நடை-3 மிகவும் தளர்ந்த நீளமான வாக்கிய நடை. நடை-1 சுஜாதாவின் சுருக்கிய நடையே.
கதையின் முடிவில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. மனிதன் தன் படைப்பூக்கத்தில் உருவாக்கிய ஒரு இயந்திரம் தன்னிச்சையாக படைப்பூக்கம் கொள்ளுமா, அல்லது ஒரு இயந்திரமாகத்தான் செயல்படுமா? இன்றைய விஞ்ஞானிகளின் முக்கியமான ஆராய்ச்சி இந்தத் தளத்தைச் சார்ந்தே உள்ளது — செயற்கை நுண்ணறிவு (artificial intelligence).