எனக்கு கதையின் பெயர்காரணமும் புரியவில்லை. கடைசிவரியும் புரியவில்லை.
வேலையில்லாமல் சிறுபத்திரிக்கை நடத்திக்கொண்டிருக்கும் நபர் ஆவடியில் நடக்கும் வேலைச்சந்தைக்குச் (ஜாப் ஃபேர்) செல்கிறார். அங்கு ஒரு பழைய ஏசியில்லாத அறையில், அவரைப் போன்றே பூட்சால் சுண்டு விரலில் வலிக்கின்ற மாதிரி ஒருவரைச் சந்திக்கிறார். வாசுதேவன் என்பவரும் அந்தப் பத்திரிக்கை தொடங்கியவர். அவரைத் தனக்கு தெரியுமே என்று வந்தவரிடம் விசாரிக்கிறார். வாசுதேவன் யாரென்றே தெரியாவிடினும் தனக்கு தெரியும் என்று பேசுகிறார் வந்தவர்.வேலைச்சந்தைக்கு விளம்பரம் ஒன்று போடுவதற்காக பேசுகிறார்கள். முடிந்தவுடன், வந்தவர் அந்தக் கட்டிடத்தின் பின்புறம் செல்கிறார்.
கடைசிவரி “ஒரு மூடிய கதவுக்குமேல் ‘ஆண்கள்’ என்று எழுதியிருந்தது.”