முத்துவிடம் ஆங்கிலோ இந்தியன் க்சேவியர் டேவிட், ராமசாமியிடம் ஹிஸ்டிரி நூல் வாங்கிவரச்சொல்லி அனுப்புகிறான். ராமசாமி அடித்துவிடுவேன் என்று சொன்னதால், க்சேவியர் டேவிடிடம் தெரிவிப்பதற்காக வரும்போது, தவறுதலாக ஃபிரான்சிஸ் க்சேவியர் வீட்டிற்குச் செல்கிறான். அவன் சரியான வீட்டைக் காண்பித்து அனுப்பிவைக்கிறான். க்சேவியர் டேவிட் ஃபிரான்சிஸ் க்சேவியரிடம் பழகவேண்டாம் என்று கூறுகிறான். “அவன் ரொம்ப கெட்டவன்”. திரும்பும் வழியில், ஃபிரான்சிஸ் க்சேவியர் நாளை மாலை முத்துவைப் பாடவருமாறு கட்டளையிடுகிறான். இருவரும் கில்டிற்குச் செல்கிறார்கள். பெண்கள் மத்தியில் பாடுகிறார்கள். முத்து ‘ஞானக் கண் ஒன்று’, ‘காயாத கானகத்தே’ பாடுகிறான். ஃபிரான்சிஸ் ‘அப் ஆயி பஸந்த் விஹார்’ சித்தாரில் வாசிக்கிறான். ஃபிரான்சிஸ் டேவிடுடன் பழகவேண்டாம் என்று கூறுகிறான். “அவன் ரொம்ப கெட்டவன்”. முத்து அவனிடம் சித்தார் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். ஆனால் அவன் அப்பா ஃபிரான்சிஸை வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார், பெண்கள் விஷயத்திற்காக.
முத்து கிராமோபோனுக்குப் ‘பங்கஜ் மல்லிக்’ இசைத்தட்டு வாங்குகிறான். அவனுக்கு அது சித்தார் இசையாகவே கேட்கிறது