சமூக அறம் என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற ஒரு மாற்றிலியா என்ன? சமூகம் மாற்றமடையுந்தோறும் அறமும் மாறுகிறது. இடத்திற்கேற்பவும் அறம் மாறுபடுகிறது. ஒரு மனிதனின் சமூக இடத்தை ஒட்டியும் அறம் மாறுபடுகிறது. ஒரு மாநகரத்தில் அறம் என்பது என்ன? அந்த மாநகரத்தில் உள்ள ஒரு குப்பத்தில் அறம் என்பது என்ன? அந்தக் குப்பத்தில் வாழும் சாகும் தருவாயில் இருக்கும் ஒருவனின் மனைவிக்கு அறம் என்பது என்ன? பொன்சென்னையில், ஓர் இருண்ட இரவில், சாகும் கணவனுக்கு பால் வாங்குவதற்காக ஒருத்தி ஒரு மணி நேரம் தன்னையே விற்கிறாள்.