தொழில்நுட்பம் வளரவளர செயற்கைதன்மையும் வளரும் என்று அடிக்கோடிடுகிறார் அசோகமித்திரன். ஒரு பழைய தொழில்நுட்ப புகைப்படக்கருவிக்காக வெயிலில் நிற்கவேண்டியிருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்து ஃப்ளாஷ் வந்தவுடன் நிழலிலேயே புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மனிதர்கள் செயற்கைத்தனமாக, அசைவில்லாமல், உயிரோட்டமில்லாமல் பொம்மைபோல் நிழலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வர்.
கல்யாணப்பிள்ளையும் பெண்ணும், அவனுடைய நண்பகளோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறான். ஒரு நண்பன் பழையமாடல் கருவிதான் வைத்திருக்கிறான். பெண்வீட்டில் ஏற்பாடுசெய்த கல்யாண புகைப்படக்காரன் ஒரு நவீனக்கருவி வைத்திருக்கிறான். அதனால் அவர்கள் பந்தலில் உள்ளேயே புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். புகைப்படத்தில் எல்லோரும் பொம்மைபோல் தெரிகின்றனர்.
அசோகமித்திரன் பெண்ணுக்கும் புகைப்படக்காரனுக்கும் ஏதும் உறவு உண்டோ என்று தோன்றும் அளவு சில வரிகள் ஆங்காங்கே எழுதிச்செல்கிறார். ஒருவேளை புகைப்படத்தைப்போன்று கல்யாணமும் பொம்மை கல்யாணமாக இருக்குமோ?