புலிக்கலைஞன் (அசோகமித்திரன்)

விஜய் மே 18, 2014 #வாசிப்பு #சிறுகதை

ஒரு கலைஞனை இச்சமுதாயம் எந்தளவு அந்நியப்படுத்துகிறது, எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை விவரிக்கும் கதை.

டகர்பாயிட்காதர் தன் கலையை “இது வேற மாதிரிங்க” என்று சொல்கிறான். கலை என்பது சராசரி கேளிக்கைக்காக உருவாக்கப்படும் ஒன்றல்ல. அது சராசரி தளத்திலிருந்து மேலெழுந்து செல்லக்கூடியது. ஒரு கலைஞன் தன் தளத்தில்மட்டும்தான் உயர்வான நுண்ணறிவும், தேர்ச்சியும், படைப்பூக்கமும் கொண்டிருப்பான். காதர் தன் கலையை நிகழ்த்திய பின்னர் அசோகமித்திரன் இவ்வாறு எழுதுகிறார். “நம்ம சம்சாரம் வீட்டுப்பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க”. அவன்தான் சில நிமிடங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.



< பின்
⌂ முகப்பு