பாலற்றத்தன்மை

விஜய் அக்டோபர் 1, 2014 #குறிப்பு

http://www.eanil.com/?p=474

பாலற்ற ஒருவரின் பதிவின் மொழியாக்கத்தை இவ்விணைப்பில் படித்தேன். இந்தச் செய்தி எனக்குப் புதுமையான ஒன்று. ஆங்கிலத்தில் asexuality என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, எந்தப் பாலிடமும் ஈர்ப்பில்லாது இருத்தல். ஆனால், இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள, பாலற்றத்தன்மை இதிலிருந்து மாறுபட்டது என்றே நினைக்கிறேன். கட்டுரையில் இதைப்பற்றி விரிவாக இல்லை. எனினும், எனக்கு ஒரு திறப்பை இக்கட்டுரை வழங்கியது.

பாலினத்தின் திரவத்தன்மையை (gender fluidity) இக்கட்டுரையாளர் தன் வாழ்க்கையின் மூலமாக விளக்குகிறார். சமூகத்தில் ஆண் மற்றும் பெண் மீது திணிக்கப்படுகின்ற நுகர்வுகளை எதிர்க்கிறார். நான் என் நண்பர்களிடம் பொதுவாகப் பேசும், ஆண்-பெண் நுகர்வு பொருட்களின் நிறங்களின் வேறுபாட்டை இங்கே நினைவுகொள்கிறேன். மேற்கில் செயற்கையாக உருவாக்கப்பட்ட, பெண்-பின்க் இணைப்பையும், ஆண்-நீலம் இணைப்பையும் நான் நண்பர்களிடம் அவ்வபோது பேசுவது உண்டு. இவை மிகச்சிறுவயதிலேயே குழந்தைகளிடம் திணிக்கப்படுகின்றன.


< பின்
⌂ முகப்பு