நண்பனுக்கு ஒரு கடிதம்

விஜய் மார்ச் 3, 2015 #குறிப்பு

அன்பின் நண்பா,

மனித மனம் எல்லையில்லாமல் சிந்திக்கக்கூடியது. உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்கக்கூடியது. ஒரு நிகழ்வுக்கு அனைத்து சாத்தியங்களையும் துழாவித் துழாவி முடிவெடுக்க முடியாமல் திணறக்கூடியது. பழையதைத் திரும்பத் திரும்ப மீட்டெடுத்து ஏங்கவைக்கக்கூடியது. புதிய சாத்தியங்களுக்காக முதல்-கதவுகளைச் சற்று அழுத்தமாக மூடிவைத்திருக்கக்கூடியது. குழியின் ஆழத்தில் உள்ள கருமையையும் குளிர்ச்சியையும் அளித்து, நம்மை மீண்டுவராமல் புதைக்கக்கூடியது.

எழுந்து வா.

அன்பின், விஜய்


< பின்
⌂ முகப்பு