கார்ல் சேகனின் தொடர்பு

விஜய் ஜனவரி 24, 2016 #வாசிப்பு #நாவல்

கார்ல சேகனின் தொடர்பு நாவல் பொதுவான பொழுதுபோக்கு அறிவியல்புனைகதைகளிடம் இருந்து மிகவும் வேறுபடுகிறது. சராசரி மனிதனின் வாடிக்கையான நம்பிக்கை, தன்னைத் தவிர மற்றவர் எல்லோரும் தனக்கு எதிரியே. சேகனின் வேற்றுகிரக உயிர்கள் அன்பின் உருவமாக இருக்கின்றனர். இவ்வண்டம் விரிவதிலிருந்து புதிய நட்சத்திரக்கூட்டங்களை உருவாக்கி காப்பாற்றுகின்றனர். மனிதனைவிட பரிணாம வளர்ச்சியில் பலபடிகள் மேலுள்ளனர். பரிணாமத்தின் எல்லா “சிறிய” உயிர்களையும் தொடர்புகொண்டு நீங்கள் தனித்து இல்லை என்று சொல்கின்றனர். இது மனிதனின் சிந்தனைக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எப்போதும் மனிதர்கள் மற்றவர்களிடமிருந்து தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்ளலாம், எப்படி அவர்களை அழிக்கலாம் என்றே உள்ளது. இது பரிணாம வளர்ச்சியில் நாம் எடுத்த வழியின் காரணமாக இருக்கலாம். எப்போதும் காட்டில் எந்த விலங்கு நம்மைத் தாக்கும் என்ற விழிப்பே நம்மை அழிவில் இருந்தே காப்பாற்றியிருக்கிறது. இந்நாவல் இதுவரை இப்படி இருந்துவிட்டோம், ஆனால் இனியும் இப்படித்தான் இருக்கவேண்டுமா என்று கேட்கிறது. மற்ற உயிர்களிடம் அவை வேற்று கிரகத்திலேயே இருந்தாலும் அவை வேறு வடிவில் இருந்தாலும் அவை உருவமே இல்லாமல் அருவமாக இருந்தாலும் அன்பை எதிர்கபார்க்கலாமே என்று கேட்கிறது.

ஆனால் சேகன, அன்பை எதிர்பார்க்காமல் இருந்தால்தான் என்ன? அவர்கள் நம்மை அழிக்கவந்தால்தான் என்ன? அதுவும் இயற்கைதானே. இயற்கை என்பது அன்பும் அழிவும், உயிர்ப்பும் சாவும் கலந்ததுதானே!


< பின்
⌂ முகப்பு