நிலப்பிரபுத்துவச் சூழலில் அந்தரங்கம் என்பது ஓர் இனக்குழுவின் சுற்றம்வரையே. தனிமனிதரின் அந்தரங்கம் என்ற கருத்தாக்கமே ஜனநாயகம் உருவானபின்னரே முளைத்தது. இந்தியாவின் முதல் தனிமனித அந்தரங்கத்தின் வெளிப்பாடு நம் முதல் நாடுதழுவிய தேர்தலின்போது நடந்தது.
இது ஒருபுறம் இருக்க, குடும்பத்தின் உள்ளே நமக்கு தனிமனித அந்தரங்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது; பள்ளியில் தினமும் என்ன நடந்தது என்று கேட்கும் பெற்றோரிடமிருந்து, இந்த நேரம் எங்கிருந்தாய் என்று கேட்கும் அக்காவின் தம்பிகள் வரை.
உள் அந்தரங்கத்தின் வெளி அந்தரங்க வெளிப்பாடு, டைரி எழுதுவது. ஒரு மனைவி குடும்பத்தில் எப்படி டைரி எழுத அனுமதிக்கப்படுவதில்லை, ஒரு பெண்ணுக்கு அந்தரங்கம் என்பதே இருக்கக்கூடாது என்ற இன்னும் ஜனநாயக இந்தியாவில் நிலவும் நிலப்பிரபுத்துவ குடும்பச் சூழலை விவரிக்கிறது ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டைரி’ சிறுகதை. மனைவியின் அந்தரங்கமான டைரியை கணவனின் தாய், தந்தை, கடைசியாக கணவனே பறிப்பதைப் பற்றிய கதை.
ஒருவரின் தாயே ஆனாலும், தந்தையே ஆனாலும், அல்லது அரசே ஆனாலும், தனிமனித அந்தரங்கத்தை அவர்களுக்கு விலைகொடுக்கமுடியாது. அவ்விதத்தில் இன்றைய Right to privacy பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக இந்தியாவின் ஒரு பெரிய மைல்கல். என்னோடு யார் கைகோத்து நடக்கவேண்டும் - எந்த பாலினமாக இருந்தாலும் - என்றுசொல்ல அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
https://www.facebook.com/urapvr/posts/10214000566112026