குறள் ஒரு தமிழ் பேரிலக்கியநூல். அதை ஒரு சமணர் இயற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருவள்ளுவமாலை வள்ளுவரைப் புகழும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல். அதில் ஒரு பாடல் அந்தணர் பயிலும் வேதங்களையும், வள்ளுவர் இயற்றிய குறளையும் பற்றி பேசுகிறது. இதை ஜெயமோகன் உரையிலிருந்து தெரிந்துகொண்டேன்.
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று” - திருவள்ளுவமாலை
நூல்களில் எழுதிவைத்தால் ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்வேதங்களை உரைபாடல்களாகவே பயில்கின்றனர். ஆனால், ஏட்டில் எழுதினாலும் அதை வல்லுநரும் பொதுமக்களும் வள்ளுவர் இயற்றிய குறளைப் பயின்றாலும் அதன் ஆற்றல் குறையாது. வேதங்கள் ஒரு closed source ஆக இருந்திருக்கிறது, குறள் ஒருவித open source (திறமூலம்) நூலாகக் கொள்ளலாம். இம்முறை சமணர்களின் அறிவுப்போக்கு. அவர்கள் எப்போதும் கல்வியும் மருத்துவமும் எல்லா மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்று விரும்புபவர்கள். நைஸ்.