ஒரு குற்றவுணர்வுள்ள செயலை மறப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற ஒரு நுண்கேள்வியை முன்வைகிறது இக்கதை. ஒரு பெண் தன் கடந்தகால பாலியல் உறவு ஒன்றை மறக்க முற்படுகிறாள். அதற்கு அவள் தேர்ந்தெடுக்கும் வழி இன்னொரு பாலியல் உறவைக் கையில் எடுப்பதுதான். தன் கடந்தகால நினைவுகளை ஒரு ஆணின் உடல் மீது சாய்த்துவிட்டு கடந்துசெல்ல முற்படுகிறாள்.
அவள் தன் நினைவுகளை கடந்துபோகத்தான் முயற்சிக்கிறாளா, அல்லது அண்ணனின் நினைவுகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறாளா என்பது ஒரு நுட்பமான கேள்வியாகவே மிஞ்சுகிறது!