உலக நூல் நாள்
மொழி மொழிவது.
எழுத்து கடத்துவது.
அறிவுக்கடத்தி.
எழுத்து பதிவு.
ஓவியத்துக்குப் பின்பாக தோன்றிய பதிவு.
ஓவியத்தினூடாக தோன்றிய பதிவு.
காண்பதைச் சொல்வது எழுத்து.
காட்சியாக தொடங்கியது முதல் எழுத்து.
காண்பதைச் சொன்னது எழுத்து.
கணக்கைச் சொல்வது எழுத்து.
பணக் கணக்கு. இவர் இதை இவருக்கு கொடுத்தார்.
கணக்கைச் சொன்னது எழுத்து.
வென்றதைச் சொல்வது எழுத்து.
நான் அரசன், நான் இதை இவனை வென்றேன்.
இச்செல்வம் ஈட்டினேன். நான் ஆண்டவனின் மகன்.
வென்றதைச் சொன்னது எழுத்து.
உள்ளம் சொல்வது எழுத்து.
சிறுமணிப் பூக்கள் உதிர்கின்றன.
இதோ இவள் மனம் யாருக்கு காத்திருக்கின்றன.
உள்ளம் சொன்னது எழுத்து.
அறம் சொல்வது எழுத்து.
மாசில்லா மனம் ஆதல் என்றது அது.
அறம் சொன்னது எழுத்து.
வினா உரைப்பது எழுத்து.
ஏன் எப்படி எது எதற்கு எவ்வளவு,
அப்படியே அதுவே அதற்கே அவ்வளவே.
விடை தருவது எழுத்து.