தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். |
Beautiful smile on the scarlet mouth of the one Who has a sweet, radiant, moon-like glow. Thus describing your pearls, you ask me to buy them, o man! Exchanging our shining white pearls from the splashing sea, Our traders receive fragrant flower garlands. This is Pugār. |
Pic credits: Call me by your name movie