கண்டே போஹே (அவல் உப்புமா) - மராத்தி சிறுபடம்
Kande Pohe - Marathi Short Film
இயக்கம்: அபே ரௌத் (Abhay Raut)
எழுத்து: சாய் ஹவல் (Sai Haval)
இருபதுகளில் இருக்கும் இரு ஆண் காதலர்கள் இஷானும் மானவ்வும் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களைச் சந்திக்க வேற்றூரிலிருந்துவந்திருக்கும் இஷானின் பெற்றோர் முழுமுடக்கம் காரணமாக அங்கேயே தங்கிவிடும்படி ஆகிறது. பெற்றொருக்கு இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரியாது; நண்பர்கள் என்றே நினைத்திருக்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் நேரத்தில் இருவரின் நெருக்கத்தைக் கண்டு தாய் ஐயம்கொள்கிறார். இஷான் பெற்றோருக்கு தெரிந்துவிடக்கூடாதென்ற அச்சத்தோடே இருக்கிறான். மானவ் எப்போதும் இயல்பாகவே உள்ளான்;பெற்றோர் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர்களிடம் கூறலாம் என்றும் இஷானிடம் சொல்கிறான். நாட்கள் செல்லசெல்ல தாய் அவர்களின் நெருக்கத்தையும் மானவ் இஷானிடம் கொண்டிருக்கும் காதலையும் அன்பையும் புரிந்துகொள்கிறார். இறுதியில் சாப்பிடும்நேரத்தில் பெற்றோர் அவர்களிடம் பேசலாம் என்று முடிவுசெய்கின்றனர்; அதேபோல் இஷானும் மானவ்வும் பெற்றோர்களிடம் சொல்லலாம் என்று முடிவுசெய்கின்றனர்.
தன்பால் காதலர்களுக்கு அவர்கள் பெற்றோரிடம் இருக்கும் தயக்கத்தை மிக இயல்பாகக் கூறும் மராத்தி குறும்படம்.