ஜூன் 22, 2020 லிருந்து
தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.
Pic credits: Call me by your name movie
Beautiful smile on the scarlet mouth of the one
Who has a sweet, radiant, moon-like glow.
Thus describing your pearls, you ask me to buy them, o man!
Exchanging our shining white pearls from the splashing sea,
Our traders receive fragrant flower garlands.
This is Pugār.
எண்ணெய்த் தலை முழுகி, என் தெருவே போறவரே
பாராதீரு என் முகத்தை, பழிகள் வந்து சேர்ந்திடுமே
கல்லோடு கல்லுரச, கடலுத் தண்ணி மீனுரச
உன்னோட நானுரச, உலகம் பொறுக்கலையே
Pic credits: Call me by your name movie
The one with oiled hair who passes by my street,
See not my face, else we shall be blamed.
A stone rubbing off a stone, a fish rubbing off sea water,
Me rubbing off you, the world can hardly bear.
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்,
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்,
‘இவ்’ என அறியும் அந்தம் தமக்கு இலவே;
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.
Pic credits: Chitrangada movie
Words that refer to feminine people changed from masculine,
[And words that refer to masculine people changed from feminine, (implied)]
And words that refer to gods,
Do not have a specific gendered ending.
They take the gendered form based on the referred individual(s).