கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன் வய மான் அடித் தேர்வான் போல தொடை மாண்ட கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பல் நாளும் பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின் பெண் அன்று உரைத்தல் நமக்காயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் நாண் இன்மை செய்தேன் நறுநுதால் ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன் ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின் மற்று ஒய்யென ஒண்குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் |
O, the one with soft flowery black-lined eyes, look here. A man, Like an archer wearing a tight garland looking for a lost deer, Came and saw me. Not expressing his love through words, he left, Conveying only through his face. I, the one who could not be with him, Did not sleep for many days due to sorrow, and Drowned in grief. He should be the one who must see my eyes and express himself, And not me, a woman. Nevertheless, worrying that he might not even know my feelings, With the determination given by my thinning shoulders, I committed an immodest act. O, the one with beautiful forehead, Near the millet fields, Where we chase away pandemonium of parrots, While I was playing on a swing, he came. I said, “O man, push me a little.” He said, “Alright, o girl,” and swung me. I acted as if my hands were adrift, and I fell on his chest falsely. Thinking it was true, he quickly caught and embraced me. I let myself on him as if I were unconscious. When I woke up with consciousness, He immediately said, “O, the girl with bright ear-rings, take leave.” Such was his goodness. |