சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்த வரிப் பந்து கொண்டு ஒடி நோ தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை அடர் பொற் சிரகத்தால் வாக்கி சுடரிழாய் உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனோ அன்னை அலறிப் படர்தர தன்னை யான் உண்ணு நீர் விக்கினான் என்றேனோ அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன் |
O my friend with the bright bangle! Listen. The boy, Who smashed our sand houses That we built while playing on streets, Who cut the flower garlands That we wore, Who annoyed us By snatching our striped playball, Came to our house when my mother and I were there, And asked, “O people in the house, water!,” and for that My mother said to me, “Give him water in a golden vessel,” and I too proceeded with ignorance, but He clutched my bangle-hands firmly which made me unnerving, and I exclaimed, “Mother! Look at what he is doing!,” hearing which My mother came running, and I said, “O, he is hiccupping on drinking water,” for which My mother started patting his back gently, while That thief of a boy smiled at me Glancing at me out of the corner of his eye In such a way that he would take away my heart. |