ஏறு கோடலும் குரவை ஆடலும் - கலித்தொகை 106

விஜய் மார்ச் 3, 2021 #மொழிபெயர்ப்பு #கலித்தொகை

Bull Endurance and Dance-circle Singing - Kaliththogai 106

கழுவொடு சுடு படை சுருக்கிய தோற்கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்
வழூஉச் சொற் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்

அவ்வழி
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்றினம் பல களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன

தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ் வாயும்
வைவாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய்வார் குருதிய ஏறு எல்லாம் பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன

அவ் ஏற்றை
பிரிவு கொண்டு இடைப் போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர்

அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை
மரத்தைப் போல் தொட்டன ஏறு
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி  
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை

ஆங்கு
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ

முயங்கிப் பொதிவேம் முயங்கிப் பொதிவேம்
முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம்
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே

ஆங்கு போர் ஏற்று அருந் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்
காரிகைத் தோள் காமுறுதலும் இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே

ஆங்க
அருந் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்
ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு
மாற்றாரைக் கடக்க எம் மறம் கெழு கோவே
With wooden rod and hot tool in a noosed leather bag,
Carrying music-abound mandai from a rope hanging around the shoulder,
With a sweet sounding kondrai flute,
Chatting in a colloquial manner, herdsmen walk
With their cattle drenched in rain, and
Carry them to the wide land.

In that way are
Those that rise dust kicking their forelegs,
Those that stab the ground,
Those that echo others’ sounds,
Those that leap on each other.
These bulls that shake their humps look like
Those warriors who have seen multiple battles.

These fight amongst each other by
Stabbing their sharp horns
Which cause their bodies to drip with blood
That the whole scene looks like clouds passing
The sky during red dawn.

Then, the herdsmen,
Send a few additional bulls between them,
Move them with their respective mates,
Bifurcate them into two groups, similar to
The one who split the vast ocean and created landmass.

The bulls,
Step on these men as they run, trample them,
Stab them with their flaming horns,
Pierce them like uzhalai woodbars locking on
To the holed guard gates in shed.
As the men have butterfingers owing to touching the wound
Dripping in blood, they
Scoop and knead the soil,
Smear on their bodies, and
Grab the bulls as fishfolk would grab
The rushing boat on the sea.

The lined bowels dug out by the beautiful horns
Hang like the garland
Dropped down by the kite that flies above the earth
Over the deities residing under banyan and kadamba trees.

Over there,
Holding hands with their affectionate lovers,
Who have thusly fielded the bulls in the land,
Milkwomen sing and enjoy forgetting themselves.

I will embrace and rest on his chest.
I will embrace and rest on his chest.
I will embrace and rest on his chest,
Fomenting by my warm breasts
Over the wounds caused by murderous bulls, o friend!
Smudging the blood caused by murderous bulls
Through the churned curd drops over my shoulders -
Isn’t it my embracing shoulder’s ornament, o friend?

Fearing the heads of fighting bulls, and
Loving milkwoman’s shoulders -
Aren’t these two states the opposite, o friend?
Will my lover provide me such wealth of townsfolk wondering,
“Her lover is the one who embraced the murderous bulls,”
While I go about selling curd, o friend?

Our sweet bee-sounding song spreads everywhere
Cherishing our lover and specialized bulls.
O, our brave king!
May you win over enemies.
May they lose their land and pay you tributes.



< பின்
⌂ முகப்பு