மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத் தழுவநின்று என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன் நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே |
O cloud! O cloud! Did he, the lovely man, Who stands in the good Venkatam, Not have the power To afflict me by embracing the Inner of my heart and Pour himself inside, Just as the outer clay embraces The inner wax mould and The molten metal pours itself inside? [in lost-wax casting technique.] O sea! O sea! Will you convey, Going to the snake-bed itself, Of the one Who churned and swirled you Entering your body and Took away your essence, Of the deceptionist Who likewise entered my body and Is severing away my life, My afflictions? |