தங்கினர் காதலோரே - கலித்தொகை 2

விஜய் மார்ச் 12, 2021 #மொழிபெயர்ப்பு #கலித்தொகை

Your lover stayed back - Kaliththogai 2

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய
இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்று ஐய

தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என  
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை

இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை

இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை

என இவள்
புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற அன்புற்றுக்
காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத் தாழ்பு நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி என்
சொல்வரைத் தங்கினர் காதலோரே
Along with the old man who appeared when it all started,
When amarars begged to destroy the valor of those who did not abide,
As furious as the god of time,
To destroy the treacherous avunars,
Posing a fiery front,
The three-eyed man destroyed all the three forts.
His face scorched like a bright sun,
When that fierced one who wielded a battle axe,
Turned the forts to rubble.
As if a mountain is shattered open,
That hot and dazzling path proves a challenge to travellers -
Over there,
You proceed to leave,
As the dejected one who does not forget your love
Begins to decline.
Listen, o man.

Considering that
Not providing alms when wealth has run out is dishonor,
Will the wealth earned by travelling across the mountains
Be of any substance? -
Without the wealth of inseparability with
The breast of the one,
Whose determination is strong,
Who will not live on your leaving.

Considering that
Not providing alms to those who say “I have none” is dishonor,
Will the wealth earned by treading across many pebbled paths
Be of any substance? -
Without the wealth of inseparability with
The embrace of the one
Who cohabits with you
Citing you as the companion
In past lives.

Considering that
Not providing alms to those who do not have shelter is dishonor,
Will the wealth earned by crossing forests
Be of any substance? -
Without the wealth of inseparability with
The wide lean shoulders of the one
Who receives acclamation
As constant as the pole star.

Thus, she grieves with affliction, and
To leave her for wealth is not love, as I say this:
Brimming with love,
Like a ferocious running elephant
Which does not submit even to goad, but
Which submits to a harp,
Being afraid of you losing natural grace,
Hearing my words,
He, your lover,
Stayed back.



< பின்
⌂ முகப்பு