அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்கப் பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் எனப் பல இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என ஒல்லாங்கு யாம் இரப்பவும் உணர்ந்து ஈயாய் ஆயினை செல்லு நீள் ஆற்று இடைச் சேர்ந்து எழுந்த மரம் வாடப் புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் எனப் பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை அம்மரத்து அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன என ஆங்கு யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் கானம் தகைப்ப செலவு |
To make her embarassed by the unfair gossip in town, To make her constantly think about the long dry path that you take, To have her bangles slipping off from hands, To have her tired eyelids accumulating tears, To have an unbearable affliction on her dull forehead, To make her lose charm, You desire to leave for work, Listen now. “She is the wealth who will not live if you leave,” Even as I plead so in many ways, you are not ears. On the dried out pond along the path that you pass by, May the lovely flower fade along with their leaves. “Her nature will suffer if you forcefully leave,” Even as I plead relevantly so, you do not give up to your senses. As the high tree on your path go parched, May the drooping flowering creeper wither out. “She will die if you consider giving up attachment,” Even as I plead so with humility, you make your travel plans. On the tree along the path where you boldly go, May the bud wear out losing its beauty. Thusly, Even as I say these, you are not ears. Like the friend who speaks the truth admonishing you, To make you realize her feelings, The forest will stop your journey. |