அமிச்சினி கொச்சினி தொமாரே, ஒகோ பிதேஷினி, துமி தாக்கொ ஷிந்துபாரே, ஒகோ பிதேஷினி. தோமாய் தேக்கேச்சி ஷாராதொப்ராத்தே, தோமாய் தேக்கேச்சி மாதோபி ராத்தே தோமாய் தேக்கேச்சி ஹ்ரிதி மாஜாரே, ஒகோ பிதேஷினி. அமி ஆகாஷே பாத்தியா காண், ஷுனேச்சி ஷுனேச்சி தொமாரே கான், அமி தொமாரெ ஷ்னொப்பேச்சி ப்ரான், ஒகோ பிதேஷினி. பூபானோ ப்ரோமியா ஷேஷே அமி எஷேச்சி நுத்தொனோ தேஷே, அமி ஒதித்தி தொமாரெ த்வாரே, ஒகோ பிதேஷினி. |
உனையறிவேன் ஓ வேற்றூர்ப்பெண்ணே, அறிவேன். உன் உறைவிடம் கடலுக்கப்பால் உள்ளது, ஓ வேற்றூர்ப்பெண்ணே. இலையுதிர்க்காலைகளில் உனைக் கண்டிருக்கிறேன். மணக்கும்மாலைகளில் உனைக் கண்டிருக்கிறேன். என் மனதாழங்களில் உனைக் கண்டிருக்கிறேன், ஓ வேற்றூர்ப்பெண்ணே. வான்வெளியில் செவிமடுத்து, உன் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். என் உயிர் உனதேதான், ஓ வேற்றூர்ப்பெண்ணே. உலகம் எல்லாம் சுற்றி, கடைசியில் இப்புதுநிலத்தில் கால்பதிக்கிறேன். உன் வாசலில் நின்றிருக்கும் விருந்தினர் நான், ஓ வேற்றூர்ப்பெண்ணே. |