மாயாபோனோ பிஹாரிணி ஹொரிணி கொஹொனொ ஷொப்பொனொ ஷொஞ்ச்சாரிணி கேனோ தாரே தொரிபாரே கோரி போன், ஓகாரோண்? - மாயாபோனோ பிஹாரிணி தாக் தாக் நிஜொ மொனே தூரே தே. அமி ஷுது பன்ஷுரிரோ ஷூரே தே - பொரோஷொ கொரிபொ ஓர் ப்ரானோ-மொன் ஓகாரோண் - மாயாபோனோ பிஹாரிணி சொமோகிபே பகுனெரோ பொபோனே பொஷிபே ஆகாஷ் பாணி ஷ்ரோபோனே. சீட்டோ அக்குலொ ஹொபே அனுக்கோன், ஓகாரோண் தூர் ஹோத்தெ அமி தாரே ஷாதிபோ கொபோனே பிரோஹோ டோரே பாதிபோ பதோனோ பிஹினோ ஷெய் - ஜெ பதோன் ஓகாரோண் - மாயாபோனோ பிஹாரிணி |
மாயவனத்தில் அலையும் மான், என் ஆழ்கனாக்களில் உலாவுகின்றது. நான் ஏன் அதைப் பிடிக்க நினைக்கின்றேன், காரணமின்றியே? நிற்க; அது தொலைவிலேயே இருக்கட்டும். என் குழலிசையின் வழியாகவே அதன் உயிரையும் வாழ்வையும் எட்டுவேன், காரணமின்றியே. பருவமழைக்காற்றில் திடுக்கிடும். பேசும்வானின் ஒலிக்கேட்டு சரணடையும். சிலநேரங்களில் அமைதியற்று இருக்கும், காரணமின்றியே. தொலைவில் இருந்தே ஏங்கிக்கொள்வேன். யாரும் அறியாமல் பிரிவின் கயிற்றால் முடிப்பிலா முடிச்சிட்டு பிணைப்பேன், காரணமின்றியே. |