முரளியிடம் உலைவற்ற நிதானமன்றி வேறில்லை. வரப்போகும் பாதையின் திருப்பங்கள் அனைத்தும் அவனுக்கு முன்பே தெரியும் என்பது போல அவன் நடப்பான். அவனுடன் வாழ்வது அர்ஜுனுக்கு ஒருவித இலகுவான உணர்வைக் கொடுத்தது. தயக்கமற்ற தாளம் போல இருந்தது. அர்ஜுன் தன்னுடன் வந்து வாழுமாறு கேட்டபோது, எந்தவித நாடகமும் இல்லாமல் இயல்பாக ‘சரி’ என்று முரளி ஒப்புக்கொண்டான். ஆர்ப்பாட்டமான உறுதிமொழியைவிட, எளிமையான ‘சரி’ என்பதற்குத்தான் என்னவோர் எடைமிகுதி!
முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=10653