நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
ஒளவை எழுதிய புறநானூறு (187) பாடல்.
Poem by Auvai in Purananooru collection (no. 187)
நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் எங்கே நல்ல மனிதர்கள் உள்ளாரோ அங்கே நன்றாக வாழ்வாய் நிலமே |
Whether in city or in forest wild, Whether in valley low or on mountain piled, Where people of virtue reside, There, O Land, you thrive and abide. |
ஔவையின் அபாரமான எளிமையான பாடல். கூரிய எளிமை என்று சொல்லலாம். மனிதர்களின் எண்ணிக்கை அல்ல, மனிதர்களின் “நல்லைத்தனம்” தான் ஒரு நிலம் செழிப்படைய காரணம். எப்போது ஜனநாயகம் எடுபடும், எப்போது முன்னோக்குடையோரின் (தீர்க்கதரிசிகள்) பங்கு இன்றியமையாதது என்பது மிக முக்கியம்.