புறநானூற்றில் நிலையாமை

புறநானூறு - 356

களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பிறழ்பல் (பேழ்வாய்)
ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கொல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே

தாயங்கண்ணன் எழுதிய புறநானூறு (356) பாடல்.
Poem by Thaayangkannan in Purananooru collection (no. 356)


அகண்ட பாழ் நிலம்
உயர்ந்துவளர்ந்த கள்ளிச்செடிகள்
பகலில் கூவும் ஆந்தை
பெரியவாய் கொண்ட/பிறழ்ந்த பற்களைக் கொண்ட    
பிணம் எரிக்கும் தீ
பேய் மகளிர்
இவை அச்சம் வரவழைக்கின்றன

நெஞ்சை விரும்பும் காதலர்
அழுத கண்ணீர்
சுடுகாட்டில் நிறைந்துள்ள
எலும்பின் வெண்சாம்பலைக் குளிரச்செய்கிறது

எல்லாருடைய மறுபக்கத்தையும் தான் கண்டு
உலகத்து மக்கட்கெல்லாம்
தானே இருப்பிடமாய் இருக்கும்

இந்தப் புகைப்பனி நிறைந்த முதியகாடு
தன்னை வெல்பவர்களைக் கண்டதில்லை
A saline wasteland,
sprawling and cactus-choked,
where the owl cries even by the light of day.
Here, ghoul-women dance
in the eerie glow of the pyre-flame
wavering like gaping, crooked teeth.
This foggy smoke-veiled, ancient ground is a place of terror.

The tears of heart-bound lovers,
weeping for the departed,
fall to cool the white ash of burned bone.

This ground sees the back of everyone,
serving as the final, fiery forge for all of humanity.

It has never known a single soul who could turn and see its own back.

புறநானூறு - 357

குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண்
பொதுமை சுட்டிய மூவ ருலகமும்
பொதுமை யின்றி யாண்டிசி னோர்க்கும்
மாண்ட வன்றே யாண்டுக டுணையே
வைத்த தன்றே வெறுக்கை வித்தும்
அறவினை யன்றே விழுத்துணை யத்துணை
புணைகை விட்டோர்க் கரிதே துணையழத்
தொக்குயிர் வௌவுங் காலை
இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே

பிரமன் எழுதிய புறநானூறு (357) பாடல்.
Poem by Piraman in Purananooru collection (no. 357)


குன்றுகள் கொண்ட மலைசேர்த்துச் செய்த நிலம்
நன்மை கொடுக்கும் மூவருடைய உலகமும்
சிறப்பாக ஆண்டோருக்கும்
ஆண்டுகள் நிறைந்திருக்கவில்லை
பொற்குவியல் துணையாக வைத்திருக்கவில்லை

வித்தாகிய அறச்செயல்கள் தான் பெருந்துணை

அந்தத் துணையாகிய புணையைக் கைவிட்டோர்க்கு அரிது    
உயிர் பறிக்கப்பட்டுத் துணைநின்றோர் அழும்போது
இக்கரையில் நின்று உயர்ந்து அக்கரைக்குச் செல்லுதல்
This land of high peaks,
bound by mountain chains,
this world of the famed Three Kings –
even for them who ruled it,
the appointed years were not endless.
Their hoarded treasure was no true companion.

Only the seed of good deeds is your greatest support.

For those who let go of that raft,
it is difficult indeed,
when life is snatched away and your loved ones weep,
to ascend from this shore and reach the other.

புறநானூறு - 358

பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபக லெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக்
கையவி யனைத்து மாற்றா தாகலிற்
கைவிட் டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅ டிருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே

வான்மீகி எழுதிய புறநானூறு (358) பாடல்.
Poem by Vaanmiki in Purananooru collection (no. 358)


பரிதியொளி சூழ்ந்த
இந்தப் பயன்மிக்க பெரிய உலகம்
ஒரு பகலில் ஏழுபேர் ஆள்வதைப் போன்ற நிலம்

உலகவாழ்வையும் துறவையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
துறவுக்கு உலகவாழ்வு சிறுவெண்கடுகளவும் ஒப்பாது    

எனவே துறவு விரும்பினோர் அதைக் கைவிட்டனர்

அதனால் விட்டாரை விடாள் திருமகள்
விடாதோரை இவள் விட்டுவிடுவாள்
This great, fruitful sun-drenched world,
is a crown worn by seven kings in a single day.

Place the world on a scale against the hermit’s way
it weighs less than a single mustard seed.

Those desirous of that way let the world go.

And so, Fortune does not abandon those who abandon the world
it is those who do not let go that she leaves behind.