சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம், நடுகல் காதை
(இளங்கோ எழுதியது)
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்
எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே
| விண்ணோர் வடிவம் அடைந்த ஒரு நல்லுயிர் மீண்டும் மண்ணோர் வடிவில் பிறக்கினும் பிறக்கும். மனித உடலைப் பூண்ட மாபெரும் உயிர், பெரியோனே, விலங்கின் வடிவம் கொள்ளினும் கொள்ளும். விலங்கின் உடலை நீங்கிய அவ்வினிய உயிர், கலக்கம் தரும் நரகரைக் காணினும் காணும். ஆடும் கூத்தரைப் போலவே, அரிய உயிர் ஒரே கோலத்தில் நிலைத்து நிற்பதில்லை. உயிரானது, தான் செய்த வினையின் வழியே செல்லும் என்பதே, மெய்ஞானியரின் பொருளுரையாகும். ஆதலின், ஏழுமுடி ஆரம் அணிந்த மார்பனே, வெற்றி வாள் வேந்தனே, நீ ஏந்தும் அறத்தின் ஆழி வழிவழியாய்ச் சிறக்கட்டும்! |
A good soul, attaining a celestial form, may yet return to walk the earth. A life that wears this human frame, O great one, may next be bound within a beast. And that sweet life, released from beastly form, may fall to know the sorrowing hells. For the precious soul, like an actor on a stage, never stays fixed in a single role. It must follow the path of its own past deeds – This is the word of those with faultless vision. Therefore, O King of the victorious sword, You who wears the garland of seven crowns! May the Wheel of Justice you uphold endure and prosper, on and on. |